மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் மோதி இறந்த சம்பவம்: தேடப்பட்டு வந்த ஓட்டுநர் சுரேஷ் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்

0 2844

கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வேன் ஓட்டுநர் சுரேஷ் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

திங்கட்கிழமை கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

படுகாயமடைந்த கனகராஜ்,  மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து விபத்தை ஏற்படுத்திய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி செல்லும் மஹிந்திரா வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேனை இயக்கிய சுரேஷை போலீசார் தேடி வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி முன்பு சரணடைந்தான். அவனை வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments