வெள்ள சேதம் ரூ.4,626 கோடி நிதி ஒதுக்க வேண்டும் - தமிழக அரசு

0 2177

மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 4,626 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கனமழையால், ஏற்பட்ட வெள்ள சேதத்தை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்டமாக 549 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 2 ஆயிரத்து 79 கோடி ரூபாய் என மொத்தமாக 2 ஆயிரத்து 629 கோடி ரூபாய் ஒதுக்கக்கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை சமர்பித்தது.

இதனை அடுத்து பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு, ஏற்கனவே கோரப்பட்ட நிதியுடன் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 626 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments