பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்: 50 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு

0 3171

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஈசூர்-வள்ளிபுரம் இடையேயான தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பாலாற்றில் கடந்த 100 வருடங்களில் காணாத வெள்ளம் பெருக்கெடுத்தோடி வரும் நிலையில், மதுராந்தகத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள ஈசூர்-வள்ளிபுரம் தரைப்பாலத்தின் நடுப்பகுதி முழுவதுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, 50 கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், விரைவாக பாலம் அமைத்துத் தருமாறு அப்பகுதிவாசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments