நடிகர் சிம்புவின் மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லை - தயாரிப்பாளர்

0 3841

நடிகர் சிம்பு நடிப்பில் நாளை திரைக்கு வரவிருந்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தவிர்க்க இயலாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மாநாடு திரைப்படம், நவம்பர் 25ஆம் தேதியன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ள அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படம் ரிலீஸாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்  குறிப்பிட்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments