மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை இருவரும் கைது

0 2912

அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஆசிரியரும், ஆசிரியரின் மீதான குற்றச்சாட்டை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அருள்செல்வன் என்ற அந்த தமிழ் ஆசிரியர், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அருள்செல்வனால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட  மாணவிகள் 2 பேர் தலைமை ஆசிரியை ராஜேஷ்வரியிடம் புகாரளித்துள்ளனர். ஆனால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த தலைமை ஆசிரியை, மாணவிகளிடம் சமாதானம் பேச முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அந்த மாணவிகள் பெற்றோர்களிடம் நடந்தவற்றையை கூறவே, ஊர்மக்கள் அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் விசாரித்ததில், இதேபோன்று வேறு இரு மாணவிகளிடமும் ஆசிரியர் அருள்செல்வன் அத்துமீறியது தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments