கொரோனா தடுப்பூசி மூலம் இலட்சக்கணக்கான உயிர்களைக் காத்தவர் பிரதமர் மோடி - தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

0 1573

கொரோனா தொற்று உச்சம் தொட்ட போது 9 மாதக் காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டுத் தடுப்பூசி மூலம் இலட்சக் கணக்கான உயிர்களைக் காத்தவர் பிரதமர் மோடி என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜே.பி.நட்டா, வெற்றிவேல் வீரவேல் எனத் தமிழில் முழக்கமிட்டு உரையைத் தொடங்கினார். விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த திருப்பூர்க் குமரனின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.

கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தின் புதிய கட்டடத்தையும் ஜே.பி. நட்டா திறந்து வைத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments