நெல் மூட்டை ஏற்றிய லாரி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.! உயிர் தப்பிய ஓட்டுனர்

0 2292

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நெல் மூட்டை பாரம் ஏற்றிய லாரி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொல்லேகள் பகுதியிலிருந்து கும்பகோணம் செல்வதற்காக மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சத்தியமங்கலத்திலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments