பேபி அணை விவகாரத்தில் கேரள அரசு நாடகமாடுகிறது - அமைச்சர் துரைமுருகன்

0 1548

பேபி அணை விவகாரத்தில் கேரள அரசு நாடகமாடுவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்நிலைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக எந்த பணியையும் செய்யாத காரணத்திலேயே, தற்போது தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக குற்றம்சாட்டினார்.

வரும் காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்திலுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கட்சி பேதமின்றி உச்சநீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments