கணவரை பிரியப் போவதாக வெளியாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா சோப்ரா

0 4650

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸை விவகாரத்து செய்யப்போவதாக வெளியாகும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கப் பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை, பிரியாங்கா சோப்ரா  திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவை விட நிக் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தன் பெயருடன் சேர்த்து வைத்திருந்த கணவர் பெயரை பிரியங்கா திடீரென நீக்கிவிட்டதால், இருவருக்கும் இடையேயான மண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின.

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிக் ஜோனஸ் உடன் தாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மற்றும் அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments