நள்ளிரவில் காரில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: அலறல் சத்தம் கேட்டு காரை மடக்கி பிடித்த போலீசார்

0 2471

சென்னை நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் அதிவேகமாக சென்ற காரில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட நிலையில், காரை மடக்கி பிடித்த போலீசார் அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

ஸ்டெர்லிங் சாலையில் அதிவேகமாக சென்ற காரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவே, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தேவசகாயம் என்ற காவலர் விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்தார்.

அப்போது, காரில் இருந்த இளம்பெண், கூச்சலிட்டுக் கொண்டே தனது காலணியை கழட்டி உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலீசார் வந்து விசாரித்ததில் போரூரில் தங்கி மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்த அந்த இளம்பெண் நேற்றிரவு தனியார் நட்சத்திர விடுதிக்கு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு தீபக், கௌதம், சக்தி என மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர். மூவரும் சேர்ந்து இளம்பெண்ணை தங்கியிருக்கும் அறையில் இறக்கிவிடுவதாக கூறி ஏற்றிச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், அந்த பெண் கூச்சலிட்டதால் காப்பாற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments