அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆக்கிரமிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி.?

0 1952

அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அனைத்து பொறுப்புகளையும், வேலைகளையும் நீதிமன்றமே ஏற்க முடியுமா? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை  மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, சம்பந்தப்பட்ட ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நான்கு வாரத்திற்குள் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments