தலைநகரில் நிலவும் காற்று மாசு.. உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி.?

0 2308

டெல்லி காற்று மாசு வழக்கை தற்போதைக்கு முடிக்க முடியாது என்றும் பிரச்சனை தீவிரமானது என்பதால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, நிலைமையை சீராக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த மத்திய அரசு, வரும் காலங்களில் மாசு ஏற்படுவதை தடுக்க நீண்ட கால திட்டம் உள்ளதாகவும், அது படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டது.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய நடவடிக்கைகள் அடுத்த 3 நாட்களுக்கு தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் நாட்களில் நிலைமையில் முன்னேற்றம் தெரிந்தால் சில கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளலாம் என தெரிவித்தது.

இதனை அடுத்து, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் எவ்வளவு வைக்கோல்கள் எரிக்கப்படுகிறது? என மத்திய அரசிடம் கேட்ட உச்சநீதிமன்றம், வைக்கோல் எரிக்கும் பிரச்சனை எவ்வாறு சமாளிக்கப்படும்? என்றும் காற்று மாசு விவகாரத்தில் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.

மேலும், விவசாயிகள், விஞ்ஞானிகளிடம் அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று இது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments