புதுச்சேரியில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா துவங்கிய சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ பரசுராம் உயிரிழப்பு

0 4172

புதுச்சேரி நீதிமன்றத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்று கொண்டிருக்கும்போதே, அதில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அங்கு வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்று இன்று தலைவர் உட்பட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக அவைத் தலைவருமான பரசுராம் விழாவில் கலந்து கொண்டார்.

விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பரசுராமனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். சக வழக்கறிஞர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்ற போராடினர்.

நீண்ட நேரம் போராடியும் பரசுராமனிடம் அசைவு தென்படாத நிலையில், கார் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments