மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்

0 2834

தமிழகம் வந்துள்ள மத்திய பிரதேச  முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்  கோவிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்திற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள சிவராஜ் சிங் சவுகான், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதியிலும், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலிலும் குடும்பத்தினருடன் சிவராஜ் சிங் சௌகான் தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments