ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி

0 1753
ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி

ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிக்க உக்ரைனுக்கு 2 கடலோர காவல் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை ரஷ்யா அதனுடன் இணைத்துக்கொண்ட நிலையில், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன.

சமீப காலமாக உக்ரைன் அருகில் ரஷ்யா படைகளை குவித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவுக்கு உட்பட்ட இடங்களில் படைகளை குவிக்க உரிமை உள்ளதாகவும் எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments