அமெரிக்கா நடத்தும் ஜனநாயகம் தொடர்பான மாநாடு ; சீனாவிற்கு அழைப்பு விடுக்காத நிலையில், தைவானுக்கு அழைப்பு

0 1909
சீனாவிற்கு அழைப்பு விடுக்காத நிலையில், தைவானுக்கு அழைப்பு

ஜனநாயகம் தொடர்பான காணொலி மாநாட்டில் விவாதிக்க சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா, தைவானை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கும் வகையில், இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சீனாவை அமெரிக்கா அழைக்காத நிலையில், தைவானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக சீனா - தைவான் மோதல் விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், சீனாவை மேலும் கோபப்படுத்தும் வகையில் தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments