பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டுவதால் காற்று மாசு குறையும் ; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2766
பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டுவதால் காற்று மாசு குறையும் ; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டுவதும், எத்தனால், ஹைட்ரஜன் ஆகியவற்றை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவதும் காற்றுமாசைக் குறைப்பதற்கான தீர்வுகளாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டும் மையத்தைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்திய வாகனத் தொழில்துறையின் விற்றுமுதல் ஆண்டுக்கு ஏழரை இலட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும், அடுத்த ஐந்தாண்டுக்குள் இதை 15 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே தமது இலக்கு என்றும் தெரிவித்தார்.

வாகனங்களைக் கழித்துக் கட்டும் கொள்கையால் குறைந்த விலையில் கச்சாப் பொருள் கிடைப்பதுடன் உற்பத்திச் செலவும் குறையும் எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments