ரியல் எஸ்டெட் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம், 60 சவரன் நகை கொள்ளை!

0 2080

அரக்கோணம் அடுத்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் யாருமில்லாத சமயம் பார்த்து வீட்டிலிருந்த 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் 60 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜப்பேட்டை எடையர் தெருவில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் சுதானந்தன். இவர் தனது பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் மனைவி மற்றும் முன்று பெண் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு அரக்கோணத்திலுள்ள தனது மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணையை துவக்கிய காவல்துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments