3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலெர்ட்!

0 20477
3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலெர்ட்!

தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் சனிக்கிழமை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள இந்திய வானிலை மையம், ஆரஞ்ச் நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேலும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழ்நாடு - இலங்கை அருகே நெருங்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மேலும், நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என அம்மையம் அறிவித்துள்ளது.

வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்கள் கன மழைக்கும் வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments