மத்திய பிரதேசத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தள்ளுபடியில் மதுபானம் விற்பனை!

0 3014

மத்திய பிரதேசத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப் பிரியர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட கலால் துறை அறிவித்துள்ளது.

மந்த்சூர் மாவட்டத்தின் Sitamau Phatak, Bhuniakhedi மற்றும் Old Bus Stand பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை காட்டி மதுப்பிரியர்கள் தள்ளுபடி விலையில் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் விரைவில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அமல்படுத்தப்படும் என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் திட்டம் மதுகுடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக மந்த்சூர் எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments