நாட்டில் போதிய அளவில் உர உற்பத்தி நடைபெறுவதால், உரப் பற்றாக்குறை இருக்காது - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 1948

நாட்டில் போதிய அளவில் உர உற்பத்தி நடைபெறுவதால், உரப் பற்றாக்குறை இருக்காது என்று மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

நாடு முழுவதும் உரங்கள் இருப்பு பற்றி மாநில வேளாண் துறை அமைச்சர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் வேளாண்துறையின் உரத்தேவைகளை நிர்வாகம் செய்வது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பு என்றார்.

ஆக்கபூர்வமான உர நிர்வாகத்திற்கு, தேவை மற்றும் விநியோகம் பற்றி மாநிலங்கள் தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments