கொட்டும் மழையில் காதலன் வீட்டில் பஞ்சாயத்து கூட்டிய பெண்..! ஜாமீனில் வந்தாலும் விடாமல் துரத்துகிறார்..!

0 4568
கொட்டும் மழையில் காதலன் வீட்டில் பஞ்சாயத்து கூட்டிய பெண்..! ஜாமீனில் வந்தாலும் விடாமல் துரத்துகிறார்..!

5 வருடம் காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனை பலாத்கார வழக்கில் சிறைக்கு அனுப்பி வைத்த பெண், ஜாமீனில் வெளியே வந்த காதலனுக்கு நடக்க திருமணத்தை தடுக்க தனது ஆதரவாளர்களுடன் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்செந்தூர் அருகே அரங்கேறியுள்ளது.

2015 ஆம் ஆண்டு கல்லூரியில் மலர்ந்த காதலுக்கு 2017 ஆம் ஆண்டு கோவிலில் வைத்து தாலி கட்டி , லாட்ஜுகளில் அறை எடுத்து எல்லை மீறியதால் பலாத்கார வழக்கில் கம்பி எண்ணிவிட்டு ஜாமீனில் வந்திருக்கும் புது மாப்பிள்ளை திருமணிக்குட்டி இவர் தான்..!

மருதூர்கரை கிராமத்தைச் சேர்ந்த திருமணிக்குட்டியும், நயினார்பத்து பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து ஆசிரியர் பணிக்கான பி.எட். பட்டப் படிப்பும் முடித்த நிலையில், ரகசியத் திருமணம் செய்து கொண்ட திருமணிக்குட்டி, அந்தப்பெண்ணுடன் கணவன்- மனைவி போல வாழ்ந்துவிட்டு கழற்றிவிட்டுள்ளார். அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் திருமணிக்குட்டி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருமணிக்குட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டு, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதாகத் தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதற்கு நீதி வேண்டும், தன்னை தவிர வேறு பெண்ணைத் திருமணிக்குட்டி திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வைராக்கியத்தோடு, ஆதரவாளர்கள் புடை சூழ காதலன் வீட்டு முன்பு கொட்டும் மழையில் பஞ்சாயத்தைக் கூட்டினார்

திருமணிக்குட்டி வீட்டில் இல்லாத நிலையில் அங்கு போதையில் நின்றிருந்த அவனது தந்தையிடம் தனது வாழ்க்கைக்கு நியாயம் கேட்டார். உடன் வந்தவர்கள் கோஷமிட்டனர்.

ஒரு கட்டத்தில் அவரும் கதவை பூட்டி விட்டு வீட்டுக்குள் சென்றுவிட , தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து விஜயா தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். உடன் வந்தவர்கள் தொடர்ந்து ஆதரவுக்குரல் எழுப்பியதால் சம்பவ இடத்துக்குப் போலீசார் வந்தனர்

உடன் வந்தவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில் ஜாமீனில் வந்த காதலன் திருமணிகுட்டியை திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்த அந்தப்பெண் தொடர் தர்ணாவில் ஈடுபட்டார்.

தன்னை ஏமாற்றியதற்காக காதலனைச் சிறைக்கு அனுப்பி வைத்ததோடு, ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தும் அவனோடு தான் வாழ்வேன் என சேர்த்துவைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார் இந்த பட்டதாரிப்பெண்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments