தக்காளி விலை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

0 13362
வெளிச்சந்தையில் விற்கப்படும் தக்காளி விலையினை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

வெளிச்சந்தையில் விற்கப்படும் தக்காளி விலையினை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பருவ மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து விலை உயர்வதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 110 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்கும் நிலையில், கூட்டுறவுத்துறை சார்பில் குறைந்த விலையில் விற்கப்படும் என்றும் முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2 நகரும் பண்ணைப் பசுமைக் காய்கறி கடைகள் உள்பட 65 கடைகள் மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments