பண மோசடி புகாரில் சிக்கிய தலைமை காவலர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை மறுப்பு..

0 1681
மதுரையில் பண மோசடி புகாரில் சிக்கிய தலைமை காவலர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை மறுத்துவிட்டது.

மதுரையில் பண மோசடி புகாரில் சிக்கிய தலைமை காவலர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை மறுத்துவிட்டது.

தல்லாகுளம் காவல் நிலையத்தில் பணி புரிந்த வீரதங்காள் என்ற அந்தக் காவலர் மீது அவரது சகோதரர் சார்பில் அளிக்கப்பட்ட பண மோசடி புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வீரதங்காள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை முதல்கட்டத்தில் இருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை ஏற்ற  நீதிபதி சுவாமிநாதன், வழக்கில்  குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாததால் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments