உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற நேரில் அழைத்து அறிவுறுத்தியும் நடவடிக்கை இல்லை.. நீதிமன்றத்திற்கே இந்நிலை என்றால் மக்களின் நிலை என்ன? - நீதிபதிகள்

0 1889
உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற நேரில் அழைத்து அறிவுறுத்தியும் நடவடிக்கை இல்லை.. நீதிமன்றத்திற்கே இந்நிலை என்றால் மக்களின் நிலை என்ன? - நீதிபதிகள்

யர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வளாகத்தில் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்ற நேரில் அழைத்து அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கே இந்நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினர்.

மதுரை புதுதாமரைப்பட்டியில் வைகை நீர் செல்லும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையின்போது, நீர் செல்ல வழியின்றி வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் என்ன செய்தனர்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஆக்கிரமிப்பை அகற்றத் தவறினால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments