பெரம்பலூரில் மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்: ரூ.75,000 அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

0 6714

மைனர் பெண்ணை திருமணம் செய்து, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட இளைஞருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மைனர் மகளை காதலித்து திருமணம் செய்ததாக, அவரது தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ், சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் சிறையில் இருந்தபோது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியான நிலையில், அவருக்கு வேல்முருகன் என்பவருடன், பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

ஜாமீனில் வெளிவந்த சுரேஷ், தனது மனைவி சட்டவிரோத காவலில் உள்ளதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதன் விசாரணையில், சுரேஷுக்கு ஏற்கனவே இரு பெண்களுடன் தொடர்பிருப்பதாக, அந்த பெண் தெரிவித்தார்.

மேலும், தனது மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை, சுரேஷ் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக, பெண்ணின் தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, பெண்ணை மீட்க கோரிய சுரேசின் வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments