விளையாட்டுத்தனமாக ரயில்வே பெட்டி மீது ஏறிய மாணவன் உயர் மின்னழுத்த கம்பியில் கை பட்டு உயிரிழப்பு

0 18657
விளையாட்டுத்தனமாக ரயில்வே பெட்டி மீது ஏறிய மாணவன் உயர் மின்னழுத்த கம்பியில் கை பட்டு உயிரிழப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் விளையாட்டுத்தனமாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறிய ஒன்பதாம் வகுப்பு மாணவன், உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வ.உ.சி. ரயில்வே யார்டில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அப்துல்வாகிப் என்ற அந்த மாணவன், பறந்து வந்த காற்றாடியை பிடிப்பதற்காக, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியின் மீது ஏறியுள்ளான். அப்போது, மேலே சென்ற உயர்மின்னழுத்த கம்பி மீது மாணவனின் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்துள்ளான்.

பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவன் உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments