வட்டிக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்.. கார், பைக்குகளை அடித்து நொறுக்கிய கும்பல்..

0 1933
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வட்டிக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், வீட்டு பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதோடு கார், பைக்குகளை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வட்டிக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், வீட்டு பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதோடு கார், பைக்குகளை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் பைனான்ஸ் நடத்தி வரும் நிலையில் அவரிடம், அதே பகுதியை சேர்ந்த மணி, சசி, விஜி, சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் தலா ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் கேட்டுள்ளனர்.

தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று பாண்டி கூறிய நிலையில், மதுபோதையில் இருந்த அந்த 5 பேரும் பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றுள்ளனர். பின்னர் பாண்டியின் மகன் தனபாண்டி வீட்டிற்கு சென்ற அந்த 5 பேரும், பணம் கேட்டு வீட்டு பெண்களிடம் தகராறு செய்ததோடு, கார், பைக், மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments