"தக்காளிக்கு பிரியாணியும் பிரியாணிக்குத் தக்காளியும் இலவசம்" - சலுகையை அள்ளி வீசிய பிரியாணி கடை..

0 2187
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரியாணி வாங்குபவர்களுக்குத் தக்காளி இலவசம் என்ற சலுகை அறிவித்து பிரியாணி கடை ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரியாணி வாங்குபவர்களுக்குத் தக்காளி இலவசம் என்ற சலுகை அறிவித்து பிரியாணி கடை ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கனமழை காரணமாக சந்தைகளுக்கு வரத்து குறைந்து, தக்காளியின் விலை கிலோ 150 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் ஆம்பூர் பிரியாணி என்ற கடையில் "தக்காளிக்கு பிரியாணியும் பிரியாணிக்குத் தக்காளியும் இலவசம்" என சலுகை அறிவித்துள்ளனர்.

அதாவது ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும் 2 சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் அவர்கள் விளம்பரம் செய்துள்ளனர்.

இது ஒருநாள் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரியாணி பிரியர்கள் அதிகளவில் வந்து வாங்கிச் செல்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments