கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமலிடம் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்..

0 2793
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் நலம் விசாரித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் நலம் விசாரித்தார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன், சுவாச பிரச்னை, இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தான் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டார். இதனையடுத்து கமல்ஹாசனிடம் அரசியல் தலைவர்களும் திரைத் துறையினரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments