நகை வாங்குவது போல நடித்து 10 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு ஓடிய திருடன்..

0 1656
நாகையில் நகைக்கடையில் புகுந்த இளைஞன் நகை வாங்குவது போல நடித்து கடைக்காரரை ஏமாற்றி 10 சவரன் செயினை திருடிக் கொண்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாகையில் நகைக்கடையில் புகுந்த இளைஞன் நகை வாங்குவது போல நடித்து கடைக்காரரை ஏமாற்றி 10 சவரன் செயினை திருடிக் கொண்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கதிரவன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ திவ்யா ஜுவல்லரியில், நகை வாங்குவது போல கடைக்குள் சென்ற இளைஞன், செயின்களின் டிசைன்களை காட்டும் படி கூறியுள்ளான்.

உரிமையாளர் நகையை எடுக்க திரும்பிய நேரம் பார்த்து, கடையில் மாடலுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 சவரன் தங்க செயினை திருடிக் கொண்டு தப்பியோடினான்.

கடைக்காரர் பின்னாடியே ஓடி சென்றும் அவனை பிடிக்க முடியாத நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments