ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவலர்..

0 2129
மும்பையில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண், தவறி விழுந்த நிலையில், ரயில்வே பெண் காவலர் மிக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.

மும்பையில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண், தவறி விழுந்த நிலையில், ரயில்வே பெண் காவலர் மிக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.

மும்பை புறநகர் பைகல்லா ரயில் நிலையத்தில், 40 வயது பெண் ஒருவர், தவறி விழ, அங்கு பணியில் இருந்த சப்னா கோல்கர் என்னும் பெண் காவலர், சற்றும் தாமதிக்காமல் இருக்கையில் இருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, அவரை காப்பாற்றினார்.

சமூக வலைத்தளங்களில் பெண் காவலருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்காக, உள்ளூர் ரயில்களும் கதவுகளுடன் கூடிய ரயில் பெட்டிகளாக மாற்றப்பட வேண்டும், என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments