திருட சென்ற வீட்டில் அறுந்துகிடந்த மின்கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி பலியான 2 திருடர்கள்..

0 2588
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்கு நள்ளிரவில் திருட சென்ற இரண்டு கொள்ளையர்கள், அக்கட்டிட வளாகத்திற்குள் அறுந்துகிடந்த மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாகர்கோவில் WCC சாலையில் உள்ள மீட் தெருவில்  பயன்பாட்டில் இல்லாமல் இருந்த வீட்டின் வளாகத்திற்குள் இரண்டு பேர் உயிரிழந்து கிடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர்கள் கருங்கல் பகுதியை சேர்ந்த ஜாண் போஸ்கோ மற்றும்  பாறைக்கால்மடம்  பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பதும், இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

திருடுவதற்காக சென்ற போது மின்கம்பியை எதிர்பாராதவிதமாக பிடித்ததில் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments