கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; ஆற்றை ஒட்டியுள்ள அரசு பள்ளியின் வகுப்பறைக்குள் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் மாணவர்கள் அச்சம்

0 1722
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; ஆற்றை ஒட்டியுள்ள அரசு பள்ளியின் வகுப்பறைக்குள் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் மாணவர்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் சொரக்காய் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அடித்தளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு வகுப்பறைக்குள் பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றின் கரையோரம் இருந்த இப்பள்ளியில் தண்ணீர் புகுந்தது. அதன் காரணமாக பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

சேதமடைந்துள்ள பள்ளி கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments