சிலிண்டர் வெடித்து, தரைமட்டமான வீடு : உடல் கருகி மூதாட்டி பலி !

0 3907
சிலிண்டர் வெடித்து அடுத்தடுத்து 3 வீடுகள் சரிந்து விழுந்து சேதம்

சேலத்தில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பகுதியிலுள்ள பாண்டுரங்க நாதசாமி தெருவில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. கீழ் தளத்தில் இரண்டு வீடுகளும், மேல் தளத்தில் இரண்டு வீடுகளும் என நான்கு வீடுகள் இருந்தன.

அதில் நான்கு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், அதிகாலையில் கோபி என்பவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதில், மொத்த கட்டிடமே இடிந்து தரைமட்டமான நிலையில், கோபியின் தாய் ராஜலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை, பூஜஸ்ரீ என்ற 10 வயது சிறுமி உட்பட 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும், 3 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம், அருள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து கேஸ் கசிவு இருக்கலாம் என கருதி மீட்பு பணி ,மிக கவனமாக நடைபெற்று வருகிறது எனவும், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments