சைக்கிளில் ஒருவழிப்பாதையில் செல்ல முயன்ற பெண் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 10686
சைக்கிளில் ஒருவழிப்பாதையில் செல்ல முயன்ற பெண் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் ஒருவழிப்பாதையில் செல்ல முயன்ற பெண் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலை செய்து வந்த சங்கீதா என்ற அந்த பெண், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு, சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 200 அடி சாலையில் வந்த அவர், ஒருவழிப்பாதையில் செல்ல முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்து யூடர்ன் அடிப்பதற்காக வலதுபுறமாக திரும்பிய நிலையில், சங்கீதா மீது மோதி ஏறி இறங்கியது.

பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய சங்கீதா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்ததும் பேருந்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடிய பர்வீன் ட்ராவல்ஸ் ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்து கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கீதா வந்ததை பேருந்து ஓட்டுநர் தாமதமாக கவனித்ததாக கூறப்படும் நிலையில், திடீரென பேருந்தை நிறுத்த முடியாததால் விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments