பாலாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 5 மாடுகள் ; படகு மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

0 1409
பாலாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 5 மாடுகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சீறிப்பாயும் பாலாற்று வெள்ளத்தில் கடந்த 4 நாட்களாக சிக்கி தவித்த 5 மாடுகளை தீயணைப்பு துறையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

புளியங்கண்ணு பாலாறு ஆற்றுப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை மற்றும் ஆற்று வெள்ளத்தில் ஐந்து மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அவை 4 நாட்களாக ஆற்றின் நடுவே இருந்த மேட்டுப் பகுதியில் பத்திரமாக இருப்பதை கண்ட மாட்டின் உரிமையாளர்கள் ராணிப்பேட்டை காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து 10பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் சம்பவ இடத்திற்கு சென்று 5 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments