நாடு முழுவதும் முதல்முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய கணக்கெடுப்பு பணியை தொடங்கியது மத்திய அரசு

0 1401
நாடு முழுவதும் முதல்முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய கணக்கெடுப்பு பணியை தொடங்கியது மத்திய அரசு

நாடு முழுவதும் முதல்முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

டெல்லியில் இந்த பணியை தொடங்கி வைத்து பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 742 மாவட்டங்களில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றார்.

இதன் மூலம் இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலை குறித்து அரசு அறிய முடியும் என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments