சென்னை மாதவரம் சாலையில் கிடந்த 91 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்!

0 4053

சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் சாலையில்  கிடந்த  91 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பாபு என்பவர் நேற்று இரவு 10 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பால் பண்ணை கால்நடை கல்லூரி  அருகே கீழே கிடந்த பையை எடுத்து பிரித்து பார்த்ததில்  91 ஆயிரம் பணம் இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த பணத்தை  மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய ஆய்வாளரிடம்  பாபு ஒப்படைத்தார்.இந்த பணத்தை தவற விட்டவர்கள் சரியான ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments