பீகாரில் 35 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்ட ஏடிஎம்மை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்!

0 2162

பீகாரில் 35 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்ட ஏடிஎம்மை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அம்மாநிலத்தின் மோதிஹாரி என்ற இடத்தில் உள்ள கோட்வா சந்தையில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 35 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்றைய இரவிலேயே மர்ம நபர்கள் ஏடிஎம்மைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments