ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல்

0 1283
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 5ல் இந்தியா வருகை

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகைக்கு முன்னதாக 5 ஆயிரம் கோடி மதிப்பில் ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் கூட்டம் இன்று நடக்கிறது.

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த மாதம் 5ம் தேதி இந்தியா வருவதாக அறிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யத் தயாரிப்பான ஏகே 203 ரக துப்பாக்கி தொழிற்சாலையை உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் அமைப்பது குறித்த ஒப்பந்தம் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை மூலம் 7 லட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments