கொள்ளையடிக்கும் முயற்சியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

0 1976
கொள்ளையடிக்கும் முயற்சியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே கொள்ளையடிக்கும் முயற்சியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கொள்ளையர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்கதிர்பூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கிற்கு இரண்டு இரு சக்கரவாகனங்களில் வந்த 5 பேர், மணிகண்டன் என்ற ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய போது அவர் தர மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினர். சத்தம் கேட்டு, சக ஊழியர்கள் வந்த போது, 3 கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். மற்ற 2 பேர் மறைவான இடத்திற்கு தப்பிச் ஓடியது சிசிடிவியில் பதிவானது.

தகவலறிந்து வந்த போலீசார், அப்பகுதியில் சுற்றி வந்த 3 பேரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் தொடர் கொள்ளையிலும், சமூக விரோத செயலிலும் ஈடுபட்டது தெரியவந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments