ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் ; சென்னை உயர்நீதிமன்றம்

0 1967
ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள், மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என கருத்து தெரிவித்தது.

மேலும், மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments