மகாத்மா காந்தி டிராபி பரிசு மழை தொடர் போட்டி ; கபடி ஆடிய ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி

0 1592
கபடி ஆடிய ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி

திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில் நடைபெற்ற கபடி போட்டியில் ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ பங்கேற்று கபடி ஆடினார்.

அல்லித்துறையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கபடி போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

மகாத்மா காந்தி டிராபி பரிசு மழை தொடர் போட்டியில் ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தலைமையில் MP பிரதர்ஸ் அணி வீரர்கள் களம் புகுந்தனர்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் எம்.எல்.ஏ அணி வெற்றி வாகை சூடியதாக அறிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments