ஸ்ரீசைலம் வனப்பகுதியில் புலி நடமாட்டம் ; சுற்று வட்டார பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

0 1591
ஸ்ரீசைலம் வனப்பகுதியில் புலி நடமாட்டம் - மக்கள் அச்சம்

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம், ஸ்ரீசைலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலத்தின் அருகே புலி ஒன்று சுற்றித்திரிவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு ஸ்ரீசைலம் நுழைவுவாயில் அருகே சென்ற பயணிகள் சிலர், அங்குள்ள வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று சாலையைக் கடந்து செல்வதை பார்த்து வீடியோ எடுத்துள்ளனர்.

உடனே அந்த புலி புதருக்குள் சென்று மறைந்துள்ளது. முதன்முறையாக அந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், சுற்று வட்டார பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments