மழை வெள்ளப் பாதிப்பு.. பார்வையிடும் மத்தியக் குழு..!

0 1597
மழை வெள்ளப் பாதிப்பு.. பார்வையிடும் மத்தியக் குழு..!

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள மத்தியக் குழுவினர் இரு அணிகளாகப் பிரிந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிப்புகள், சேதங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சக இணைச்செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான முதல் அணியினருடன், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டியும் சேர்ந்து சென்னையில் புளியந்தோப்பு வீரப்ப செட்டித் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அழகப்பா சாலை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் வீடுகளுக்கும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் உடனிருந்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் ககன்தீப் சிங் பேடி பேசினார்.

இந்தக் குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட பின் சாலைவழியாகப் புதுச்சேரிக்குச் செல்கின்றனர். நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.

 மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான இரண்டாவது அணியினருடன், தமிழ்நாடு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர் குமார் ஜெயந்தும் சேர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றனர். இந்தக் குழுவினர் நாளை வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments