155 அடி உயர மலையில் இருந்து கயிறு மூலம் 2 நிமிடத்தில் இறங்கி 5 வயது சிறுமி உலக சாதனை!

0 2484

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுமி 155 அடி உயர மலையில் இருந்து கயிறு மூலம் 2 நிமிடத்தில் கீழே இறங்கியதோடு, 101 அடி உயரமுள்ள மலை உச்சியை 2 நிமிடம் 15 நொடிகளில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த அருணா லட்சுமியின் 5 வயது மகள் சாந்தினி லட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள 155 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கயிறு மூலம் 2 நிமிடத்தில் கீழே இறங்கினார். பின்னர் 101 அடி உயரமுள்ள மலை உச்சியை 2 நிமிடம் 15 நொடிகளில் ஏறி உலக சாதனை படைத்தார்.

சிறுமி சாந்தினி லட்சுமிக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments