சென்னையில் உரிமம் இன்றி செயல்பட்டதாக நேற்று 63 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் மீது வழக்குப்பதிவு

0 2189

சென்னை மாநகர் முழுவதும் நேற்று ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 63 மையங்கள் மீது உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர்கள் சரவணன், சாம் வின்சென்ட் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் பணியாற்றிய போது முறைகேடாக சில மசாஜ் சென்டர்களுக்கு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் நேற்று முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முறையான அனுமதி பெறாதது, சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது, மாநகராட்சி வழிகாட்டுதல்களை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments