தமிழ்நாட்டில் வரும் 24ந் தேதி முதல் 26ந் தேதி வரை கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு

0 12446

வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவித்த அம்மையம், இது அடுத்த 5 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களில் மழையின் தீவிரம் குறைந்து அதற்கு பிறகு மீண்டும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு தொடர்வதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், வரும் 24 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் 26ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments