ஆந்திராவில் கனமழை, வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

0 2519

ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழகம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்ததால் ஆந்திராவில் கனமழை பெய்தது. சித்தூர், கடப்பா, அனந்தபூர் மற்றும் நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பதி அருகே உள்ள ராயலசெருவு ஏரி உடையும் நிலையில் இருப்பதால் அதனை ஒட்டியுள்ள 18 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஏரி உடைந்தால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமையான இந்த ஏரியை கிருஷ்ணதேவராயர் கட்டியதாகக் கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments